மீண்டும் இணையும் கார்த்தி – ராகுல்

205

 

 

நடிகர் கார்த்தியும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாதப் படத்தில் இவ்விருவரும் மீண்டும் நடிக்கிறார்கள். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரியவருகிறது.

SHARE