மீண்டும் இணையும் விஜய் – அட்லி?

248

தெறி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் 60 என்று தற்காலிகமாகக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தை பரதன் இயக்கி வருகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், சதீஷ், ஆடுகளம் நரேன், அபர்ணா வினோத் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஜய் 60, 2017 பொங்கல் அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவான படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார். ஏப்ரல் 14 அன்று வெளியான இந்தப் படம், ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. ஆறு நாள்களில் ரூ. 100 கோடி வசூல் கிடைத்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் படங்களில் ஆறு நாள்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையையும் தெறி படம் பெற்றது.

இந்நிலையில் விஜய் 60-க்குப் பிறகு அட்லியுடன் இணைந்து விஜய் படம் பண்ண வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சிவாஜி பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ள விஜய், அடுத்தப் பட இயக்குநராக அட்லியையே தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெறி படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் மீண்டும் விஜய் – அட்லி கூட்டணி எதிர்பார்க்கப்பட்டாலும், இவ்வளவு சீக்கிரத்தில் இருவரும் மீண்டும் இணைய இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.vijay

SHARE