இலங்கை அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாம் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக சுரங்க லக்மல் இணையவுள்ளார்.
சமீரவும், தம்மிக்கவும் கடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்ததன் காரணமகவே அவர்கள் இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் விலகியது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுரங்க லக்மலின் அனுபவம் இங்கிலாந்து அணிக்கு கணிசமான அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.