மீண்டும் ஒரு காதல் விவகாரம்! கழுத்து அறுக்கப்பட்ட ஆண்

225

hed-320x160

காதல் விவகாரங்களினால் கழுத்து அறுக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் மற்றும் ஏனைய விபரீதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் அதிகளவில் இடம்பெற்று வந்த நிலையில் இலங்கையிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

இச்சம்பவத்தில் ஒரு சிறிய வித்தியாசமும் உண்டு. தமிழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும் பெண்களாக இருக்க, இச்சம்பவத்தில் ஆண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரட்டை சகோதரிகளை காதலித்த பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மாணவர் ஒருவரால் மற்றுமொரு பாடசாலை மாணவரின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் – எலயாபத்துவ பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட மாணவன் அவரது காதலியின் சகோதரியுடன் நட்பினை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இருவருக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

SHARE