மீண்டும் ஒரு மெர்சலான சாதனை! ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் கொண்டாடவைத்த தருணம்

163

விஜய்க்கு  அண்மைகாலமாக வெற்றி வாகை தொடர்ந்து சூடப்பட்டு வருகிறது. கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் பல சாதனைகளை செய்தது.

இந்நிலையில் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS 2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் கடந்த ஜூலை மாதம் 21 – ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பலரின் பெயர் இருந்தது.

அந்த பட்டியலில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய்யும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் வெளியான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய், கென்னத் ஓகோலி, டைம் ஹசன், ஜோஷுவா ஜேக்‌ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம் பிடித்துள்ளது.

இவர்கள் அனைவரும் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஐஏஆர்எ வரும் 22 – ம் தேதி லண்டனில் இவ்விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

SHARE