தென்னிந்திய மொழி படங்களில் வில்லனாக மட்டுமின்றி பல குணச்சித்திர வேடங்களும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் பிரகாஷ்ராஜ்.
நடிப்பது மட்டுமின்றி படம் இயக்குவதிலும் அதிகம் ஆர்வம் காட்டிவரும் அவர் ‘தோணி’ , ‘உன் சமயலறையில்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாக இப்போது அறிவித்துள்ளார் அவர்.
‘மன ஊறி ராமாயணம்’ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்த படம், விரைவில் படபிடிப்பை தொடங்கும் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.