மீண்டும் சுண்ணத்துப் பண்ண தயாராகும் தமிழ் தலைமைகள்

359

 

உத்தேச புதிய அரசியலமைப்பு, உத்தேச தேர்தல் சீர்திருத்தங்கள் என்பன தொடர்பில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், இருப்பு, பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நிலைப்பாடு பற்றிய கருத்தொருமைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் முக்கியமான கலந்துரையாடலொன்று இன்று கொழும்பு 07இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது.1656114_1051576634893799_4640163660413667708_n

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் இரு கட்சிகளும் ஒருமித்த கருத்துகளை முன்வைப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டதுடன் அவை தொடர்பிலான சில விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவை தொடர்பில் தொடர்ந்தும் சந்தித்து விரிவாக கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது .

அத்துடன் கல்முனை உட்பட கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவி வருகின்ற தமிழ், முஸ்லிம் முரண்பாடுகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் பொருட்டு உள்ளூர் மட்டத் தலைமைகள் மத்தியில் பேச்சுகளை முன்னெடுப்பதற்கும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது .

 

SHARE