ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்கில் மீண்டும் வெடிச்சத்தம் கேட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
கடந்த 3 தினங்களுக்குப் பின், செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் மெட்ரோ ரயிலில் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் குண்டு வெடிக்கச் செய்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து மத்திய ஆசியாவைச் சேர்ந்த மூவரை ரஷ்ய பொலிசார் கைது செய்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீடுகளை சோதனை செய்தனர்.
அதில் மெட்ரோ ரயிலில் வெடித்த அதே ரக குண்டு இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனிடையே மீண்டும் அதே பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உறைந்தனர்.
ஆனால், அது கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது எழுந்த சத்தம் என்றும், வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டதால், தைரியமாக அந்த குடியிருப்பில் குடியேறலாம் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பீட்டர்ஸ்பர்கில் மெட்ரோ ரயில் தாக்குதல் தொடர்பாக 8 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்