ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோமியோ ஜூலியட் திரைப்படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
கடந்த 2 ஆண்டு காலமாக சரியான வெற்றி கிடைக்காமல் தவித்த வந்த ஜெயம் ரவிக்கு இந்த வெற்றி பெரிய ஆறுதலாக அமைந்தது ,அதனாலே மீண்டும் அதே இயக்குனர் லக்ஷ்மனின் இரண்டாவது படத்தில் நடிக்க ஒப்பு கொண்டு இருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத லக்ஷ்மன் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம் , ஒரு வகையில் இது ஒரு நன்றி கடன் செலுத்தும் வகை தான் என்று ஜெயம் ரவி தரப்பு சொல்கிறது.