மீண்டும் பிரதமர் தேர்தலில் போட்டியிட தயாராகும் கனடா பிரதமர்

150

கனடாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரதமர் தேர்தலில், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கனடா நாட்டின் தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை அவரது தலைமையிலான லிபரல் கட்சி, வரும் தேர்தலில் மான்ட்ரியல் மாகாணத்தில் பப்பினியா தொகுதி வேட்பாளராக அவரை அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில்தான் அவர் 2008, 2011, 2015-ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார்.

ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாகவும், மக்களிடையே நேர்மறையான சிந்தனையுடன் நாட்டை வளப்படுத்த உறுதிபூண்டுள்ளதால், பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட விரும்புவதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

SHARE