நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை காரணமாக பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதனால் பேருந்து துறை ஆபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அதற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதாக அகில இலங்கை பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து எரிபொருள் கட்டணம் அதிகரிக்கின்றமையினால் சிறிய தூரம் பயணிக்கும் பேருந்துகளுக்கு மாதம் 22500 ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய புதிய பேருந்து அறிமுகம் செய்யும் போது நூற்றுக்கு 2 வீத வட்டி கடன் உதவி ஏற்படுத்தல், டயர், டியுப் மற்றும் மேலதிக உதிரி பாகங்களுக்கு விலை குறைப்புகளை மேற்கொள்ளவில்லை என்றால் உடனடியாக கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.