மீண்டும் மாடுகளை சுடத் தொடங்கிவிட்டார்கள்

277

மட்டக்களப்பு எல்லையில் மேய்கின்ற எங்களின் மாடுகளை மீண்டும் சுடத்தொடங்கிவிட்டார்கள் என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பற்று பிரதேச பண்ணையாளர்கள் தங்களது ஆதங்கங்களை ஊடகத்திற்கு கருத்துதெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினர்.

மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களக் குடியேற்றவாசிகள் அந்தப்பகுதிகளில் மேய்கின்ற தங்களது மாடுகள் மீது மீண்டும் துப்பாக்கிகளைக்கொண்டு சுடத்தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர்கள் தொடர்ந்து கூறுகையில்,

எங்களது மேய்ச்சல்தரை பிரதேசத்தில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களக் குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்துவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர், மகாணா விவசாய அமைச்சர், மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் குறித்த சிங்கள குடியேற்ற வாசிகளுடன் பேசினார்கள்.

எல்லை பிரச்சினைக்கு தீர்வு வரும்வரை இங்கு மேய்கின்ற மாடுகளை சுடக்கூடாது எனக் கூறிச்சென்றனர்.

ஆனால் அவர்கள் சென்ற அடுத்த நாளே எங்கள் மாடுகளை அவர்கள் சுடத்தொடங்கி விட்டார்கள். ஆளுனரின் கட்டளைக்கு அமைய எல்லைப்பகுதியில் குடியேறியுள்ள அத்துமீறிய சட்டவிரோத சிங்களக் குடியேற்றவாசிகளுடன் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரபால பேசிச் சென்றிருந்தார்.

அவர் வந்து பேசிச் சென்ற அடுத்தநாளே (09.07.2016) எங்களது மாடுகளை அவர்கள் சுட்டுக்கொன்று விட்டார்கள்.

இது குறித்து கரடியணாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால், எந்தப்பயனும் இல்லை. இங்கு வந்த அரசாங்க அதிபர் எல்லையை அடையாளப்படுத்தி பெயர்பலகை போடுவதாக சொன்னார் போக்குவரத்திற்கான வீதிகளை செய்து தருவதாக சொன்னார்.

கூட்டம் நடாத்தி அத்துமீறிய குடியேற்றத்தை நிறுத்துவதாக சொன்னார் ஆனால் எதையும் இன்றுவரை அவர் செய்துதரவில்லை.

அங்கு தொடர்ந்தும் காடுகள் அழிக்கப்படுகின்றது குடியேற்றங்கள் நடைபெறுகின்றது எமது மாடுகள் தாக்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி கரடியணாறு பொலீசார் வந்துபோகின்றார்கள்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதாக சொல்கின்றார்கள் ஆனால் எதுவும் நடந்ததாக தெரியவில்லை பொலிஸாரின் நடவடிக்கைகளை மீறி இங்கு எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

எனவே ஜனாதிபதி உடனடியாக இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

சுடப்பட்ட மாடுகள் குறித்து சேகரிக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2) 625.0.560.320.500.400.197.800.1280.160.95
SHARE