மீண்டும் யுவராஜ் சிங்.. ரெய்னா அதிரடி நீக்கம்: அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

244

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த தொடர் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைவராக டோனி தொடர்கிறார். ரோஹித் சர்மா, தவான், கோஹ்லி, ரஹானே, அஸ்வின் உள்ளிட்டோர் வழக்கம் போல் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடரில் அசத்திய ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவருக்கு ஒருநாள் தொடரில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தென் ஆப்பிரிக்க தொடரில் சொதப்பிய ரெய்னா ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேலும், 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட யுவராஜ் டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதே போல் 2011ம் ஆண்டுக்கு பிறகு அணியில் இடம்பெறாத நெஹ்ராவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷிகர் தவான், 2. ரோஹித் சர்மா, 3. விராட் கோஹ்லி, 4. ரஹானே, 5. மணீஷ் பாண்டே, 6. டோனி (அணித்தலைவர்), 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. முகமது சமி, 10. அக்சார் படேல், 11. இஷாந்த் சர்மா, 12. உமேஷ் யாதவ், 13. குர்கீரத் சிங், 14. ரிஷி தவான், 15. பரிந்தர் ஸ்ரன்.

டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்-

1. ஷிகர் தவான், 2. ரோஹித் சர்மா, 3. கோஹ்லி, 4. ரஹானே, 5. யுவராஜ் சிங், 6. டோனி (அணித்தலைவர்), 7. ரெய்னா, 8. அஸ்வின், 9. ஜடேஜா, 10 முகமது சமி, 11. ஹர்பஜன் சிங், 12. உமேஷ் யாதவ், 13. ஹர்திக் பாண்டியா, 14. புவனேஸ்வர் குமார், 15. ஆசிஸ் நெஹ்ரா.

SHARE