சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித்த சேனாரத்னவை நியமிக்க கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக சுகாதார அமைச்சராக ராஜித்த சேனாரத்ன இருந்த போது சுகாதாரத்துறை முற்றாக சீர் குலைந்துள்ளது இந் நிலையில் மீண்டும் அவர் சுகாதார அமைச்சராக பதவியேற்றால் மருத்துவ துறையில் பாரிய நெருக்கடி ஏற்படுமென அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்களின் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் ராஜிதவிடம் குறித்த அமைச்சை மீண்டும் ஒப்படைத்தால் மருத்துவ துறைறயின் நிலை கேள்விக்குறியாகும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதே வேளை குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.