மீண்டும் வடக்கின் அபிவிருத்தியில் பங்கெடுத்துள்ள நோர்வே அரசு…! விபரம் உள்ளே

267

625-117-560-350-160-300-053-800-210-160-90

வட மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்க நோர்வே அரசாங்கம் முன்வந்துள்ளது.

நோர்வே தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியன இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளன.

200 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகமான குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.

இதேவேளை, குறித்த திட்டத்தின் ஊடாக விவசாயம், மீன்பிடி மற்றும் புதிய வியாபார மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE