மீண்டும் விஜய் சேதுபதி எடுக்கும் ரிஸ்க்?

429

விஜய் சேதுபதி எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் ஆரம்ப காலத்தில் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆக, பல படங்களில் நடிக்க கமிட் ஆனார்.

இதை தொடர்ந்து வெளிவந்த ரம்மி, வன்மம், பன்னையாரும் பத்மினியும், புறம்போக்கு ஆகிய படங்கள் தோல்வியை தழுவின, இதனால், கொஞ்சம் கேப் விட்டு நடித்த நடித்த நானும் ரவுடி தான் நல்ல ஹிட் ஆனது.

இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில்காதலும் கடந்து போகும், இறைவி, இடம் பொருள் ஏவல், மெல்லிசை, தர்மதுரை, சேதுபதி என பல படங்கள் வரவிருக்கின்றது. இப்படங்கள் ஹிட் ஆனால், விஜய் சேதுபதி மார்க்கெட் உச்சத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஒரே ஆண்டில் இத்தனை படங்களை ரிலிஸ் செய்வது கொஞ்சம் ரிஸ்கும் கூட என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

389448-vijay-sethupathi

SHARE