மீண்டும் வில்லியாகும் சமந்தா!!

192
வில்லியாக களமிறங்கிய சமந்தா

சமந்தா
‘ஓ பேபி’ படத்தை அடுத்து சமந்தா நடிப்பில் தற்போது ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியுள்ளது. இதில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதை அடுத்து பல கதைகளை கேட்ட அவர், இன்னும் எந்த புதிய படத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால், மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘எ பேமிலி மேன்’ என்ற இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமந்தாஇந்த தொடரின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் அவர் வில்லி வேடத்தில் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
SHARE