மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

203

தமிழ் சினிமாவில் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா படம் மூலம் தமிழில் குடும்பப்பாங்கான நடிகையாக வந்து பில்லா படத்தில் மிக கிளாமராக நடித்திருந்தார்.

அஜித், விஜய், ரஜினிகாந்த் என பிரபல நடிகர்களோடு நடித்தவர் ஹீரோயின்களை மையப்படுத்தி வரும் கதைகளில் குதித்தார். அதிலும் மாயா, அறம் படம் அவருக்கு மிகவும் கைகொடுத்தது.

பேய்களை மையப்படுத்திய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த இடத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா சர்மா நடித்து அண்மையில் பாரி என ஹிந்தியில் வெளியானது. இது அழுத்தமான பேய்கதையாக இருந்தாலும் பெரிதளவில் போகவில்லை. ஆனால் அனுஷ்காவுக்கு மிக முக்கிய கேரக்டராம் .

அதனால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஒருவர் முடிவெடுத்துள்ளாராம். அனுஷ்கா ரோலில் நயன்தாராவை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

SHARE