மீண்டும் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிப்பு?

129

இலங்கையில் வெதுப்பக உணவுகளின் விலை மீண்டும் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உணவுகளின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கு அரசாங்கத்தால் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே விலைகளை அதிகரிக்க சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கோதுமை மாவின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE