வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன் பின் அவருக்கு வந்த படங்கள் பெரிதளவில் அமையவில்லை.
அதே நேரத்தில் விஷால் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த மருது படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ஒத்தைக்கு ஒத்த, சங்கிலி புங்கில் கதவ திற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது விஜய் மில்டன் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.
இப்படத்திற்கு மழை பிடிக்கா மனிதர் என டைட்டில் வைத்துள்ளார்களாம்.