மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சட்டத்தரணிகளை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீதொட்டமுல்ல ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கைது
கொழும்பின் புறநகர் மீதொட்டமுல்லையில் குப்பை கொட்டும் இடம் தொடர்பில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற பணிப்புரையின் கீழேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சட்டத்தரணி நுவன் போப்பகே உட்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இதில் பெரேரா என்பவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். எனினும் போப்கே இன்று காலை பொலிஸில் சரணடைந்தார்.
ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கொலன்னாவ மேயர் உட்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.