பொலிவியாவை ஒட்டிய அமேசான் நீர்நிலைகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் கில்லர்மோ ஒட்டா பாரம் என்பவரின் வலையில் முன்னெப்போதும் இல்லாத அரிய வகை மீன் சிக்கியுள்ளது.
வழக்கத்தில் பைசே (paiche) என அழைக்கப்படும் இந்த மீன், விலங்கியல் மொழியில் அரபைப்மா கைகாஸ் (Arapaipma gigas) என அழைக்கப்படுகிறது.
நன்னீர் (freshwater) மீன் வகைகளில் மிக பெரிய மீனான இது சுமார் 4 மீட்டர்(12 அடி) வரை நீளமும் 200 கிலோகிராம் நீளமும் உடையது.
ஆரம்பத்தில் இவ்வகை மீன் ஆபத்தானது என நினைத்து பிடிக்க அஞ்சிய மீன்பிடி தொழிலாளர்கள், இவற்றிற்கு பெருகி வரும் தேவைக்காக தேடி பிடிக்கின்றனர்.