மீனவ பிரச்சினை தொடர்பில் கொழும்பில் பேச்சுவார்த்தை

172

இலங்கை, இந்திய மீன்பிடித்துறை கூட்டு குழு மற்றும் அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளன.

இந்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் இதனை ராமேஸ்வரத்தில் செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் இந்த மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்தப்படவிருந்தன.

 எனினும் இலங்கையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதால், அந்த கூட்டங்களை ஒத்திவைக்க நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த கூட்டத்தில் வைத்து, இலங்கையில் தடுப்பில் உள்ள 140 படகுகளையும் விடுவிக்க அரசாங்கத்தை தாம் வலியுறுத்தவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE