மீன் தடை குறித்து ஆராய்வதற்கு பிரஸ்ஸல்ஸ் செல்லவிருந்த குழுவின் பயணம் தாமதம்!

246
images
ஐரோப்பிய ஒன்றிய மீன் தடை குறித்து ஆராய்வதற்கு இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரஸ்ஸல்ஸ் செல்லவிருந்த நிலையில் குறிந்த பயணமானது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி வரை .குறிந்த கலந்துறையாடல் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக குறித்த கலந்துறையாடல் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் செயலணியைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் அங்கம் வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி ஐரோப்பிய சந்தைக்கு இலங்கை மீன்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தடையை நீக்குவதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய குழுவொன்றை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமித்திருந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட இக்குழுவே நாளை மறுதினம் பிரஸ்ஸல்ஸ் செல்லவிருந்தது.

இதேவேளை குறித்த குழுவில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட நான்கு பேர் இந்தக் குழுவில் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE