மீரியபெத்தயில் அபாயம்!

347
 பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பிரதேசத்தில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொஸ்லாந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரியபெத்த அம்பிட்டிகந்த பிரதேசத்திலேயே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த அடைமழைக்காரணமாக கடந்த 20 ஆம் திகதி, 11 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவு எச்சரிக்கையை குறைப்பதற்காக தியத்தலாவ, இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவீரர்கள் மழைநீர் முறையாக வடிந்தோடுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்துவருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

SHARE