மீ டூ எல்லாம் விளம்பரத்திற்காக தான் உள்ளது – தமன்னா

145

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா காலா பட வில்லன் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்ததில் இருந்து தான் இந்தியா முழுவதும் மீ டூ இயக்கம் வேகமாக பரவியது. கோலிவுட் பக்கமும் சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாக பாலியல் புகார்களில் சிக்கிய பாலிவுட் இயக்குநர் சஜித்கானின் படங்களில் நடித்தபோது தனக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என்று நடிகை தமன்னா முன்பு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது, மீ டூ இயக்கம் வழி மாறி செல்கிறது என்று நினைக்கிறேன். தற்போது மீ டூ விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த இயக்கத்திற்கு உரிய மரியாதையை அளித்து சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்திய பேட்டியில் பேசி அனைவரையும் மீண்டும் அதிர்ச்சியாக்கியுள்ளார், தமன்னா.

SHARE