முகத்திரை அணிந்த பெண்ணை வெளியேற்றிய உணவகம்இனவெறியை தூண்டுவதாக பொதுமக்கள் ஆவேசம்!

187

download

ஜேர்மனியில் உணவகம் ஒன்று முகத்திரை அணிந்த பெண் ஒருவரை வெளியேற்றியதால் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள திரளான கூட்டம் அந்த உணவகத்தில் கூடியுள்ளது.

சுமார் 3000 விருந்தினர்கள் ஒன்று கூடிய அந்த நிகழ்வில் ஒரே ஒருவர் மட்டும் முகத்திரை அணிந்து வந்துள்ளார். இது அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உடனடியாக அவர் குறிப்பிட்ட முகத்திரை அணிந்த பெண்மணியிடம் வந்து, நிகழ்ச்சியை மேற்கொண்டு காண முடியாது என்றும் முகத்திரையை அகற்ற வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொள்ளாத அந்த பெண் அந்த உணவகத்தின் உரிமையாளரை திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட பெண்ணிற்கு ஆதரவாக அந்த உணவக உரிமையாளரிடம் வாதாடியுள்ளனர்.

மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து பதிவேற்றி விவாதித்துள்ளனர்.

இச்செயல் இனவெறியை தூண்டுவது போன்று உள்ளதாகவும் குறிப்பிட்ட உணவகத்தின் உரிமையாளர் இனவெறி கொண்டவர் எனவும் அந்த உண்வகத்தின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் தாம் செய்த செயல் உண்மையில் வருந்ததக்கதல்ல எனவும் சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டதாகவும், வேறு அசம்பாவிதங்கள் நடக்காதவாறு சமயோசிதமாக நடந்துகொண்டதாகவும் அந்த உணவகத்தின் உரிமையாளர் ஷூல்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக ஜேர்மனியில் புர்கா அணிவதற்கும் பொதுவீதியில் முகத்திரை அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தீவிரமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு பாவரியா மாகாணத்தின் ஆளும் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏஞ்சலா மெர்க்கேல், மத சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வது என்பது பொதுவீதியில் பெண்கள் முகத்திரை அணிய வேண்டுமா என்பதை அவர்கள் தெரிவு செய்வதை ஏற்றுக்கொள்வது போலாகும் என்றுள்ளார்.

SHARE