
நம்மில் பலருக்கு இருக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஓன்று எண்ணெய் வழியும் முகம். எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.
முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.