முகம் பளபளன்னு இருக்க

190

பொதுவாக எல்லா பெண்களுக்குமே தாங்கள் பிறரை கவரும் வகையில் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவரிடம் உண்டு. இதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பது உண்டு.

ஆனால் இது பலவழிகளில் முகத்திற்கு கெடு தான் விளைவிக்கின்றது. அதற்கு நாம் இயற்கை பொருட்களை கொண்டு நமது முகத்தினை அழகுப்படுத்தி கொள்ள முடியும்.

க்ரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. தற்போது இந்த கலவை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • க்ரீன் டீ
  • தேன்
பயன்படுத்தும் முறை

க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள்.

பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

SHARE