மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நாளாந்தம் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நுவரெலியாவில் அதிக முகில் கூட்டம் காணப்படுகின்றது. இதனால் வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை செலுத்திக் கொள்வதில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந் நிலையில் நுவரெலியா பதுளை பிரதான பாதையில் பதுளை நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி ஒன்று கட்டுமான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதால் இரண்டு முச்சக்கர வண்டிகளும் சேதம் அடைந்துள்ளது. இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோசமான காலநிலையில் வாகன ஓட்டுனர்கள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
தகவலும் படங்களும்:- பா.திருஞானம்