முக்கியமான  பொறுப்புக்களை தனது  பொறுப்பின் கீழ் வைத்துளடளமை புதிய அமைச்சரவைக்கு நெருக்கடி.     

212

பிரதமர்   ரணில்   விக்ரமசிங்க தலைமையிலான    புதிய   அமைச்சரவையினால்   எவ்விதமான   மாற்றங்களையும்    இடைப்பட்ட   காலத்தில்      நாட்டில்    மேற்கொள்ள முடியாது.     ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன    முக்கியமான  பொறுப்புக்களை தனது    பொறுப்பின்  கீழ்   கொண்டு   வந்துள்ளமையானது  ஐக்கிய   தேசிய   கட்சியின்    செயற்பாடுகளுக்கு   தடையாக   அமையும்   என   பாராளுமன்ற  உறுப்பினர்    செஹான்     சேமசிங்ஹ     தெரிவித்தார்.

அவர்  மேலும்   குறிப்பிடுகையில்,

தேசிய  அரசாங்கத்தில்   ஐக்கிய  தேசிய    கட்சி   தனது   விருப்பத்தின்.  பெயரில்   செயற்பட்டமைக்கு   பிரதான   காரணம்    பாராளுமன்றத்தில்    பலம்  வாய்ந்த  எதிர்   கட்சி   ஒன்று  செயற்படவில்லை.    தமிழ்       தேசிய   கூட்டமைப்பும்   மக்கள்   விடுதலை   முன்னணியும்   அரசாங்கத்தின்   பங்காளி  கட்சிகளாக   செயற்பட்டனர்.

ஆனால் நிலைமை  இன்று மாற்றமடைந்து  விட்டது.  ஆளும்  தரப்பினருக்கு   இணையாக      பலம்    வாய்ந்த  எதிர்கட்சி  தோற்றம் பெற்றுள்ளது. அத்துடன்   நிறைவேற்று  அதிகாரமும்   எமது  பக்கம்     உள்ளமை ஐக்கிய தேசிய  கட்சிக்கு  பாரிய அச்சுறுத்ததலாக காணப்படுகின்றது.

SHARE