முக அழகினை கெடுக்கும் கரும்புள்ளிகளை நீக்க சில டிப்ஸ்

117

பொதுவாக பெண்கள் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு.

ஆனால் சில பெண்களுக்கு இளம் வயதிலே முக அழகினை கெடுக்கும் கரும்புள்ளிகள் ஏற்பட்டு அழகை கெடுக்கும். எனவே இப்பிரச்சனைக்கு உரிய தீர்வை இங்கு காண்போம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றறிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரிக்கும்.

தேன்

தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும்.மேலும் இதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்ய வேண்டும்.

பால்

தினமும் பாலைக் கொண்டு உங்கள் முகத்தை சுத்தம் செய்தால் கரும்புள்ளி பிரச்சனையே இருக்காது. சுத்தமான பாலை பஞ்சில் நனைத்து அதனை உங்கள் முகத்தில் துடைத்தெடுக்கலாம்.

பேக்கிங் சோடா

தினமும் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் கரும்புள்ளி மறையும்.

க்ரீன் டீ

தினமும் க்ரீன் டீயின் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்குவதோடு சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்திடுங்கள்.

பட்டை

பட்டையில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளதால் அதன் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸை அரைத்து அதனுடன் தயிர் கலந்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை முகத்திற்கு மாஸ்க்காக போட்டு இருபது நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சருமம் நீங்கிடும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து நன்றாக கலக்கினால் கெட்டியாக மாறியதும் அந்த பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க்காக போட வேண்டும்.

பின் அரை மணி நேரம் காத்திருந்த பின்னர் கழுவி விடுங்கள்.அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றிடுவதால் கரும்புள்ளிகளைப் போக்கும்.

SHARE