முசலி வைத்தியசாலைக்கு 75 லட்சம் ரூபா ஒதுக்கீடு 

125
மன்னார் முசலி,வேப்பங்குளம் ஆரம்ப சிகிச்சைப் பிரிவில்  நான்கு வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக  சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் 75 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
அதன்படி,அவற்றுள் 20 லட்சம் ரூபா எல்லைச் சுவர் அமைப்பதற்கும், 20 லட்சம் ரூபா வைத்தியசாலை வளாகத்தை அழகுபடுத்துவதற்கும்,  20 லட்சம் ரூபா வெளி நோயாளர் பிரிவு கட்டடத்தைப் புனரமைப்பதற்கும் மற்றும் 15 லட்சம் ரூபா வைத்திய ஆதிகாரிகளின் விடுதியைப் புனரமைப்பதற்கும்  செலவிடப்படும்.
மன்னார்  மாவட்டத்தில் சிறந்த வைத்திய சேவைகளை வழங்குவதற்குத் தேவையான அணைத்து உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தான் திட்டமிட்டுள்ளார் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.
[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]
SHARE