முச்சக்கரவண்டி வண்டியில் இருந்து ஜோடி ஒன்று சடலமாக

434

 அம்பாறை உகன, ஹிமிதுராவ பகுதியில், முச்சக்கரவண்டி யொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களை புதன்கிழமை (30) மீட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கினியாகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் முல்லேரியாப் பகுதியைச் சேர்ந்த பெண்ணுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்காதல் காரணமாக இவ்விருவரும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் அம்பாறை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.odo

SHARE