முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலி

299

 

லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்ரவண்டி விபத்து சாரதி பலி

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலியானதாக லீந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பெயார்வெல்  தேயிலை தொழிற்சாலை பகுதீயிலே 10.09.2016 அதிகாலை இவ்விபத்து சம்பவீத்துள்ளது

unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed

டீ மலை தோட்டத்தை சேர்ந்த 29 வதுடைய  பெருமாள் நாகேந்திரன் என்பரே மரணமானார்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கொழூம்பிலிருந்து லிந்துலை டீ மலைக்கு தனது மனைவி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு வந்த முச்சக்கரவண்டீயின் ஒட்டுனருக்கு நித்திரை வந்ததன் காரணத்தால் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி வீபத்துக்குள்ளாகியுள்ளது இவ் வீபத்தில் முச்சக்கரவண்டீயில் வந்த மனைவி மற்றும் 1 வயதும் ஆறுமாதங்களுமான குழுந்தையும் காயமுற்ற நிலையீல் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்ததுடன் விபத்து தொடர்பில் மேலதிகவிசரைணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்

SHARE