அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியதை அடுத்து பன்னீர் அணியினர் தங்களது அடுத்த கட்ட ஆலோசனையை மேற் கொண்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இன்று மாலை, 3:00 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்கள் வாபஸ் பெற, 27ம் திகதி கடைசி நாள்.
அன்று மாலை, 3:00 மணிக்கு பின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், ‘அதிமுக பெயரும், இரட்டை இலை சின்னமும் இரு அணிகளுக்கும் இல்லை என தேர்தல் கமிஷன் நேற்று இரவு அதிரடியாக அறிவித்தது.
பன்னீர் அணியினர், தங்களது அடுத்த கட்ட ஆலோசனையை மேற்கொண்டுள்ளனர், சசிகலா தரப்பும் உச்சநீதிமன்றத்தில், முறையீடு செய்யபோவதாக கூறியுள்ளது.