பெரும்பாலும் இக்காலத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் முடி உதிர்வது சொட்டை ஏற்படுவது முடி வளர்ச்சி குறைதல் என்பனவாகும். இதற்காக நம்மில் சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று இதற்கான சிகிச்சைகள் எடுப்பதும் உண்டு. ஆனால் அவற்றால் சில பக்க விளைவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். வீட்டில் நம்மிடம் இருக்கும் இயற்கையான பொருட்கள் கொண்டு இந்த முடி வளர்ச்சியை வேகப்படுத்த முடியும். ஆளி விதை மூலம் முடி வளர்ச்சியை வேகப்படுத்த முடியும். ஆளி விதை கடுமையான முடி இழப்பு, உச்சந்தலையில் அரிக்கும் தோலழற்சி, மற்றும் தலை பொடுகு போன்ற சிக்கல்களைத் தடுக்கிறது ஆளி விதைகள் உச்சந்தலையின் pH அளவை பராமரிக்க உதவுகிறது. ஆளி விதைகளில் வைட்டமின் ஈ சத்து வலிமையான அன்டி ஆக்சிடென்ட் கொண்டது. இதனால் உச்சந்தலை மற்றும் முடி சேதமடைவது தடுக்கப்படுகிறது.
ஆளிவிதையினை கொண்டு முடி வளர்ச்சியை எவ்வாறு அதிகரிக்க செய்வது என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
2 ஸ்பூன் ஆளிவிதை எண்ணெய்
செய்முறை
முதலில் ஆளிவிதை எண்ணெய்யை அடுப்பில் சில வினாடிகள் சூடாக்கவும். பின்பு, அதனை எடுத்து, உங்கள் உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். தலை முழுவதும் மசாஜ் செய்து முடித்தவுடன், சூடான நீரில் ஒரு டவலை முக்கி எடுத்து பிழிந்து கொள்ளவும். இந்த டவலை உங்கள் தலையில் சுற்றி கட்டிக் கொள்ளவும். இந்த டவலை ஓவனில் வைத்து அல்லது ட்ரையர் பயன்படுத்தி கூட சூடாக்கலாம். டவலை சுற்றியபடி அரை மணி நேரம் இருக்கவும். பிறகு சல்பேட் இல்லாத மிதமான ஷாம்பூ மூலம் தலையை அலசவும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.
முக்கிய குறிப்பு :
எண்ணெயின் சூடு மற்றும் டவலின் சூடு மூலமாக உங்கள் உச்சந்தையில் உள்ள வேர்க்கல்களுக்கும் துளைகளுக்கும் உள்ளே சென்று ஆளி விதை எண்ணெய் ஊடுருவுகிறது. இதனால் உங்கள் உச்சந்தலை மற்றும் முடி புத்துணர்ச்சி அடைகிறது , மற்றும் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைகிறது.