முதன்முறையாக அஜித்தின் விசுவாசம் படத்தின் கதைக்களம் வெளியானது ..!

199

அஜித் நான்காவது முறை இயக்குனர் சிவாவுடன் விவேகம் படத்தின் தோல்விக்கு பிறகும் மீண்டும் விசுவாசம் படம் மூலம் கைகோத்துள்ளார்.

இப்படத்தின் திரைக்கதை வடிவமைப்பு பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது வந்த தகவல் படி வருகிற பிப்ரவரி 22ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி விசுவாசம் படத்தின் கதைக்களம் வடசென்னையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே வேதாளம் படத்தின் ஒரு பகுதியில் வடசென்னை பாஷையில் பேசி அசத்தினார் தல. இப்போ மீண்டும் படம் முழுவதும் வடசென்னை என்பதால் பட்டய கிளப்புவார் என நம்பலாம்.

SHARE