சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மன்னராட்சியின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை கொண்டது சவுதி அரேபியா. அங்கு பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், முகமது பின் சல்மான் அந்நாட்டின் பட்டத்து இளவரசரானார்.
அதன் பின்னர், சவுதியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு, 5 ஆண்டுகள் சிறையுடன் கூடிய 3 லட்சம் ரியால் அபராதம், பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி என பல சட்டங்களை இயற்றியுள்ளார்.
அத்துடன், சவுதியில் பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என சில சட்டங்களையும் கொண்டு வந்தார்.
அத்துடன், சவுதியில் பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என சில சட்டங்களையும் கொண்டு வந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது தேவையான நடவடிக்கைகளை எடுக்க முகமது பின் சல்மான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அதன் முதற்கட்டமாக 10 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இனி பெண்கள் சவுதி சாலையில் வாகனங்களை ஓட்ட முடியும்.