தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தினால் கொஞ்சம் அச்சத்திலேயே தான் உள்ளனர். எப்போது யார் கையில் சிக்குவோம், என்ன ’மிமி’யெல்லாம் உருவாக்கி கலாய்த்து எடுப்பார்கள் என அச்சத்திலேயே தான் இருப்பார்கள்.
ஆனால், விக்ரம் என்ற நடிகனுக்கு மட்டும் தான் ஹேட்டர்ஸ் என்பதே இல்லை, அந்த அளவிற்கு இவரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் இவர் வாக்களிக்க வராதது பல தரப்பு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சமூக வலைத்தளங்களில் விக்ரம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றது.