முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! – நான் கூறவில்லை இதனை நான் வன்மையாக கன்டிக்கிறேன் என்று தினப்புயல் இணையத்தளத்திற்கு தொலைபேசி ஊடாக தனது அதிர்ப்தியையும் வெளியிட்டார்- மாவை.சேனாதிராசா

396

 

உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிடக் கூடாது அது தழிழ் இனத்தை
பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும்
 MR01192014J_7
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா வன்னி தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம் இன அழிப்பு தீர்மானம் மற்றும் ரணில் வருகையினை புறக்கணித்தமை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த மாவை கடும் சீற்றத்துடன்  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார். இதனை அனுமதிக்கமுடியாது. அவ்வாறு செயற்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத்தெரிவித்தார்.
20130726-123941
ஏற்கனவே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணி செயலாளர் சிவகரன் நீக்கப்பட்டுள்ளமையினை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.பதிவு இணைய செய்தி
கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சி பின்னடித்துவருகின்ற நிலையில் ஏனைய கட்சிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினை கட்சிகளின் கூட்டாக முதலில் பதிவு செய்ய முற்பட்டுள்ளன.பதிவு இணைய செய்தி

இதனால் தமிழரசுக்கட்சி அச்சங்கொண்டுள்ளது. அண்மையில் திருகோணமலையில் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் பங்கெடுப்பின்றி பதிவு சாத்தியமில்லையென கருத்து வெளியிடடிருந்தார்.அதன் தொடர்ச்சியாகவே தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாயும் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழ் ஊடகங்கள் வெளியிடக் கூடாது அது தழிழ் இனத்தை
பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் நான் கூறவில்லை
இதனை நான் வன்மையாக கன்டிக்கிறேன் என்று தினப்புயல் இணையத்தளத்திற்கு
தொலைபேசி ஊடாக தனது அதிர்ப்தியையும் வெளியிட்டார்

 

பதிவு இணைய செய்தி

 

SHARE