முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கோரிக்கை நியாயமானது – மனோ

119

வடக்கு,கிழக்கில் உள்ள    யுத்த சின்­னங்கள்  அகற்­றப்­ப­ட­வேண்டும்.வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரனின் இந்தக் கோரிக்கை நியா­ய­மா­னது என்று தேசிய ஒரு­மைப்­பாடு,நல்­லி­ணக்கம் மற்றும்  அரச கரு­ம­மொ­ழிகள் அமைச்சர்  மனோ கணேசன்  தெரி­வித்­துள்ளார்.

வடக்­கி­லுள்ள   யுத்த சின்­னங்கள்   அகற்­றப்­ப­ட­வேண்டும். இதன்­மூ­லமே   உண்­மை­யான நல்­லி­ணக்கம்  ஏற்­படும் என்று   வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.இந்த கோரிக்கை தொடர்பில்  கருத்து கேட்­ட­போதே  அமைச்சர் மனோ கணேசன் இவ்­வாறு  கூறி­யுள்ளார்.

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் வடக்­கி­லுள்ள யுத்த நினை­வுச்­ சின்­னங்­களை அகற்­ற­வேண்டும் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு  கடிதம் அனுப்­பி­வைத்­துள்ளார். இந்த செயற்­பாடு  தென்­ப­கு­தியில்  பெரும் சர்ச்­சையை  ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

முத­ல­மைச்சர் கோரி­ய­தைப்­போன்று  வடக்கு, கிழக்­கி­லி­ருந்து  யுத்த நினை­வு­ சின்­னங்கள் அகற்­றப்­ப­ட­வேண்டும்.  அதுவே  எனது நிலைப்­பா­டுமா கும்.  இலங்கை இரா­ணு­வத்­தி­னரும் பொலி­ஸாரும் யாருக்கு எதி­ராக யுத்தம்    புரிந்­தனர்?   இந்­தி­யா­விற்கு எதி­ரா­கவா? அல்­லது மாலை­தீ­வுக்கு எதி­ரா­கவா? அல்­லது பாகிஸ்­தா­னுக்கு எதிராகவா யுத்தம்  புரிந்­தனர்? இல்லை.அது உள்­நாட்டு யுத்­த­மாகும்.அன்று  ஜே.வி.பி.க்கு எதி­ராக இரா­ணு­வத்­தினர் யுத்தம் செய்­தனர். அதில் வெற்­றியும் பெற்­றனர்.  இறு­தியில்  ஜே.வி.பி. தலைவர் ரோகன விஜ­ய­வீ­ரவை கொன்­றனர்.  அன்று வெற்­றியை கொண்­டா­டினர்.

ஆனால்  அதற்காக  தெற்கிலே நினை வுச்சின்னங்கள் இருக்கின்றனவா?  இல்லையே அவ்வாறாயின்  வடக்கில்  நினைவுச்சின்னங்களை   நிறுவுவது எந்த வகையில் நியாயமாகும் என்றார்.

SHARE