முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் வியாபார விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் சார்ல்ஸ் ரிவ்கிம் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று(12)இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரு தரப்பு முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலாளர் சார்ல்ஸ் ரிவ்கின் நேற்று முன் தினம் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.