முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவருக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதற்காக அஜித் பல்கேரியாவில் AK57 சூட்டிங்கிலிருந்து உடனடியாக கிளம்பினார்.
16 மணி நேர பயணத்துக்கு பிறகு வந்த போது முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அவரின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு இன்று மறைந்த சோ அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் பல்கேரியாவுக்கு திரும்பியுள்ளார்.
தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட செல்லாத இவர் முதல்வர் மேல் உள்ள மரியாதையின் காரணமாக இவ்வளவு தூரம் நேரத்தை செலவிட்டு வந்து சென்றதை ரசிகர்களும், திரையுலகத்தினரும் பாராட்டுகின்றனர்.