முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறிய பிரபலம்

265

முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறிய பிரபலம் - Cineulagam

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என சினிமா துறையினர் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் முதல்வர் ஜெயலதிவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த வெற்றிக்கு திரையுலகிலிருந்து முதல் நபராக வாழ்த்து தெரிவித்துள்ளார்நடிகர் சிவகுமார். முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர வெற்றிக்காக அவருக்கு மலர்க்கொத்தும் அனுப்பியுள்ளார்.

தேர்தலில் வாக்களித்துவிட்டு சிவகுமார், குடும்பத்தலைவனைக் குடிகாரனாக்கி அவன் ஈரலைப் பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசங்கள் என்ற பெயரில் ஏன் வாக்கரிசிப் போடுகிறீர்கள். யார் ஜெயித்து வந்தாலும் முதலில் மதுவிலக்கை அமல்படுத்துங்கள், அல்லது படிப்படியாகவாவது அமல்படுத்துங்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

SHARE