முதல்வர் மீது விசாரணை கோரப் போகும் வடமாகாணசபை! ஆதாரங்களுடன் கனடாவிலிருந்து தாயகம் திரும்பும் அதன் உறுப்பினர்கள்.
முதல்வர் மீது விசாரணை கோரப் போகும் வடமாகாணசபை! ஆதாரங்களுடன் கனடாவிலிருந்து தாயகம் திரும்பும் அதன் உறுப்பினர்கள்.
வேலியில் இருந்த ஓணானை எடுத்து சட்டைக்குள் போட்டவனின் கதையாக முடியப் போகிறது “நட்பு நகர ஒப்பந்தம்” என்ற கோதாவில் இணையும் முல்லைத்தீவு-மார்க்கம் நகர ஒப்பந்தம்.
முதல்வரிற்கு இந்த விவகாரத்தில் சனியன் தேடிச் சென்று தானாகவே அவரைப் பிடித்திருக்கின்றது. ஏனென்றால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாணசபைகளின உறுப்பினர்கள் அவரது நடவடிக்கையைக் கண்டு, சாட்சியங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
ஏனென்றால் சமகாலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் மூன்று மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் முக்கிய அரச உத்தியோகத்தர்கள் அடங்கிய உள்ளிட்ட 30 பேரடங்கிய குழு கனடாவில் இருந்தது.
அவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான சாந்தி சிறீஸ்கந்தராசா. யாருடைய அனுமதியுமில்லாமல் முதல்வர் எந்தவொரு பிரயோசனமுமில்லாத முல்லைத்தீவு-மார்க்கம் நட்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போது முல்லைத்தீவு பாராளுமன்ற உறுப்பினரான சாந்தியை அழைத்திருக்கலாம் என்ற கோரிக்கை கூட எழுந்திருந்தது.
thanks1
குறிப்பாக முதல்வர் தங்கியிருந்த கொட்டேலின் கீழ் மண்டபத்தில் வடக்கு மாகாண மற்றும் கிழக்கு மாகாணப் பிரதிநிதிகள் அனைவரும் திரண்டு ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள, முதல்வர் ஒரு மரியாதைக்கு தானும் வடக்கு மாகாண மற்றும் கிழக்கு மாகாணப் பிரதிநிதிகள் யாரையும் சந்திக்காது நிமலனின் அறிவுறுத்ததலின் கீழே செயற்பட்டார். மாகாணசபை உறுப்பினர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார்.
இது முதல்வரின் தராதரத்தை மிகவும் குறைத்ததோடல்லாமல், அவர் என்ன திட்ட நிரலில் செயற்படுகின்றார் என்பதை அந்த 30 பேர் அடங்கிய உயர் மட்டக் குழுவும் அறிந்து கொள்வதற்கான வழியை முதல்வரே ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதன் பிரகாரம், இந்தக் குழு அறிந்த உண்மைகளில் முக்கியமானது யாதெனில், முதல்வர் இரண்டுமுறை விசாவிற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டு மார்க்கம் நகராட்சியுடனான நட்புறவு ஒப்பந்திற்கென விசா வழங்கப்பட்ட போதும், அந்த நிகழ்வுக்கு ஏழு நாட்களிற்கு முன்னரே கனடாவிற்கு வந்து தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கெதிரான சக்திகளுடன் கூடியுலாவினார் என்பதும்,
முதல்வரின் இராஜரீகம் கடந்த நடவடிக்கையால் அதிருப்தியுள்ள இலங்கைக்கான கனடியத் தூதுவர் மேற்படி நட்பு நகர ஒப்பந்த தினத்தன்று அரச பிரதிநிதியாகக் கலந்து கொள்ளவிருந்ததைத் தவிர்த்தார் என்பதையும்,
அதேபோன்று பிரம்டன் என்ற நகராட்சிக்கு முதல்வர் அவர்களது அழைப்பின் பேரில் அங்கு விஜயம் செய்த போது வடக்கு முதல்வரை மிகவும் அநாகரிகமாக அவமதிக்குவிதமாக அந்த நகரின் முதல்வர் வேண்டுமென்றே அன்று நகராட்சிக்கு வராமல் இருந்ததையும்,
அதேபோல “முதல்வர் நிதியம்” என ஒன்று இன்னமுமே மாகாணசபையால் அங்கீகரிக்கப்படவில்லையென்பதை நன்கு தெரிந்தும், அதற்கான ஒரு வங்கிக் கணக்கு இன்னமும் இல்iயெனத் தெரிந்தும் முதல்வர் கனடாவில் சுமார் 6 கோடி ரூபாய்களை தனது நிதியத்திற்கான சேர்ப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டார் என்பதையும்,
thanks2
அதேபோல பிரம்டனில் நடந்த இன்னொரு நிகழ்வில் இலங்கைப் பணத்தில் சுமார் 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதல்வர் பெற்றார் என்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதிலும் முதல்வர் நிதியத்திற்கான பணம் பெறப்பட்ட பலரும், தங்களது காசோலைகளில் பணத்தை மட்டும் குறிப்பிட்டு காசோலையைப் பெற்றார்கள் என்றும், முதல்வரின் செயலர் நிமலன் ஊடக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படப் போவதால் “யாருக்கு” அந்த காசோலை எழுதப்படுகின்றது என்ற இடத்தை வெறுமையாக விடும்படியும், தாங்கள் அதனை நிரப்புவதாகவும் முதல்வரிற்காகப் பணம் சேர்த்தோர் கூறியதாக இந்த மாகாணசபை உறுப்பினர்களிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்தப் பணம் எங்கே செல்கின்றது என்ற கேள்வியை கனடியத் தமிழர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் அறிந்து தங்களிற்குத் தெரியப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஒரு உயர்மட்ட அரச அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்,
முதலமைச்சர் தமிழர்களிற்கு ஒன்றும் கிடைக்கவில்லையென்று கூறிக் கொண்டு “வருகின்ற நிதிகளையெல்லாம் நிபந்தனைகள் விதித்து” அவற்றை மக்களிற்குச் சென்றடையாமல் தடுப்பதோடு,
இதுவரை சிறீங்கா அரச நிர்வாக காலத்திலும் இடம்பெறாத அளவிற்கு பல இடமாற்றல் கடிதங்களை தனது அலுவலகமூடாக அனுப்பி நன்கு சேவை செய்யும் பல திறமையான அதிகாரிகளை இடமாற்றியுள்ளார். இது குறித்து ஒரு தனிவிசாரணை நடத்த வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, யுத்த நெருக்கடிக்களிற்கு மத்தியிலும் இலங்கையின் நிர்வாக ஆட்சியாளர் தேர்வில் சித்தி பெற்று தாய்நாட்டில் பணிபுரியும் பல தமிழ் இளைஞர்கள் இருக்கையில் முலமைச்சர் மிகவும் கறைபடிந்த ஒரு அவுஸ்திரேலியரை தனது உதவியாளராக நியமித்துள்ளது மிகவும் ஒரு மோசமான நிலை என்றும்,
தாங்கள் பட்ட இடர்களையும், அந்த இடர்களின் போது கற்ற கல்வியையும் முதலமைச்சர் காறி உமிழ்ந்தது போன்றதே அவரது செயலெனவும், ஜனாதிபதி உள்ளிட்ட எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் செய்யாத செயலைச் செய்யும் இவரது செயலை இறைவன் தான் தட்டிக் கேட்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இன்னொருவர் கருத்துத் தெரிவிக்கையில் 2013ல் முதலமைச்சர் வென்று பதவியேற்புக்குச் சென்ற போது, சில அநாதைப்பிள்ளைகளயும், விதவைத் தாய்மாரையும் தன்னோடு கூட்டிச் செல்வார் என்று தாங்கள் பலரும் நம்பியதாகவும் ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் அவர் தனது சிங்களச் சம்பந்திகளுடன் சென்று மகிந்த ராஜபக்காவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தது அவர் தமிழர்களின் பிழையான தெரிவு என்பதையும், சம்பந்தரே இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தான் நண்பர்களிற்குத் தெரிவித்ததாகவும் கூறினார்.
இதேவேளை, தனக்கு ஓய்வுதியமாக 35 ஆயிரம் ரூபாய்கள் தான் தருகின்றார்கள். தன்னிடம் பணம் இல்லை, முதலமைச்சர் தேர்தலில் நிற்பதனால் பணம் தாருங்கள் என கேட்டு 17 லட்ச ரூபாய்களை கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து தேர்தல் செலவிற்காக வாங்கிய முதலமைச்சர் கனடாவில தான் நின்ற போது அவர்களைக் கூடச் சந்திக்காது,
தன்னை ஒரு சிறைக்குள், அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கெதிரான சக்திகளின் பிரச்சாரகர் என்ற நிலையில் வைத்திருந்த முதலமைச்சர் தனது முதல்வர் நிதியத்திற்காகச் சேர்க்கப்பட்டதாக நம்பப்படும் சுமார் 6 கோடியோ 50 லட்ச ரூபாய்களையும் எந்த வங்கிக் கணக்கில் வைத்து செலவு செய்யப் போகின்றார் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய தேவையை இந்த 30 பேரடங்கிய உயர் மட்டக் குழு வடமாகாண சபை நோக்கி எடுத்துச் செல்கின்றது.