முதல்-அமைச்சர் ஜெய லலிதா உடல் நலக்குறைவு-அப்பல்லோ டாக்டர்களிடம், ஜெயலலிதா வுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து சில ஆலோசனை

287

 

முதல்-அமைச்சர் ஜெய லலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப் பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

jayalalithaa-7591

அவருக்கு முதலில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டிருந்ததை கண்டு சிகிச்சை அளித்தனர்.அதன் பிறகு அவருக்கு சளி தொந்தரவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பல் வேறு மருத்துவ பரிசோ தனைகள்  எடுக்கப்பட்டு அதன்  அடிப்படையில் சிகிச்சை  அளிக்கப்பட்டது.அப்பல்லோ டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே மற்றும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகிய மருத்துவ குழுவினரும் ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.இதில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன் னேற்றம் ஏற்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து லண் டன் டாக்டரும், எய்ம்ஸ் மருத்துவ குழுவினரும் நேற்று புறப்பட்டு சென்றனர்.

அப்போது அப்பல்லோ டாக்டர்களிடம், ஜெயலலிதா வுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளனர். இதன் அடிப்படையில் சிகிச்சைகள் தொடர்கிறது.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரி யில் இருந்து வந்திருந்த பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோர் 3 நாட் களாக  ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டனர். அப் பல்லோ ஆஸ்பத்திரி பிசியோ தெரபி டாக்டர்களும் உட னிருந்து இவற்றை கண்கா ணித்தனர்.ஜெயலலிதா இன்று 29-வது நாளாக அப்பல் லோவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதால் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே இன்னும் 4 நாட்களில் மீண்டும் சென்னை வர உள்ளார்.  அவர் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் உள்ளிட்ட ஆலோ சனைகளை வழங்கி விட்டு செல்வார் என்று தெரிகிறது.

அதன் பிறகு ஜெயலலிதா எப்போது ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்பது முடிவு செய்யப்படும் அனேகமாக வருகிற 26 அல்லது 27-ந்தேதி ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு உள்ளதாக அ.தி. மு.க. வட்டாரங்களில் கூறப் படுகிறது. ஆனால் இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து இதுவரை அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

SHARE