முதல் கூட்டத்திலே முரண்பாடு! வெளியான காரணம்

79

 

ஐக்கிய தேசியக் கட்சிதேர்தல்களை இலக்கு வைத்து குளிடியாபிட்டிய பிரதேசத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது.

பேச்சாளர் பட்டியல்
இந்த கூட்டத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நவீன் திஸாநாயக்கவிற்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பேச்சாளர் பட்டியலில் இடமில்லை என்ற காரணத்தினால் நவீன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னிப்பு
கூட்டத்தில் பங்கேற்காமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக நவீன் திஸாநாயக்க டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பேச்சாளர் பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என நவீன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் கட்சியில் தாம் தொடர்ந்தும் இணைந்திருக்கப் போவதாகவும் கட்சிய விட்டு வெளியேறப் போவதில்லை எனவும் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

SHARE