முதல் நாள் அனிமல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. உலகளவில் எவ்வளவு தெரியுமா

126

 

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அனிமல்.

அனில் கபூர் மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று வெளிவந்த இப்படம் ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் கூட மறுபக்கம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

முதல் பாதி சூப்பர், ஆனால் இரண்டாம் பாதி சொதப்பல் என்பது போல் தான் படம் பார்த்த ரசிகர்கள் கருத்து இருக்கிறது.

முதல் நாள் வசூல்
இந்நிலையில், அனிமல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் எத்தனை கோடிகளை வசூல் செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE