ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு டெல்லியில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்னும் ஆந்த்ரே ரசல் 38 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா, நார்ஜே, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய டெல்லி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்தார். 6-வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
கொல்கத்தா 4-வது தோல்வியை (6 ஆட்டம்) சந்தித்தது. வெற்றி குறித்து டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:- இரண்டு புள்ளிகளை பெறுவது மிகவும் அருமை. முதல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் பந்து வீச்சு குழுவை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம். பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடுவோம். அதை சரியாக செய்தோம். நாங்கள் பேட்டிங்கில் மீண்டும் விக்கெட்டுகளை இழந்தோம். ஒருவருக் கொருவர் நாங்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறோம். மேம்படுத்த வேண்டிய பகுதிகள் குறித்து விவாதிப்போம். நாங்கள் சரியான விலையாட்டை விளையாடினோம் என்றார்.
கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானா கூறும்போது, ‘நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆடுகளம் எளிதானதல்ல என்பது எங்களுக்கு தெரியும். நான் அதிக நேரம் பேட்டிங் செய்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் எனது விக்கெட் முக்கியமானது.
நாங்கள் ஒரு அணியாக நன்றாக விளையாட வேண்டும். இவ்வளவு குறைந்த ஸ்கோரை வைத்து கொண்டு போராடினோம். இப்போட்டியில் பந்து வீச்சில் செயல்பட்டது போல் அடுத்து ஆட்டங்களில் பந்துவீச வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்றார்.
maalaimalar